ஈரான் பேச்சுவார்த்தை – அமெரிக்க அதிகாரிகளை சந்திக்கும் இஸ்ரேல்!
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதியும் இஸ்ரேல் பிரதமரும் வரும் புதன்கிழமை வொஷிங்டனில் சந்திப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ஓமானின் மஸ்கட்டில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். இதன்போது அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகள் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் யுரேனியம் செறிவூட்டலை ஈரான் தனது உரிமையாக கருதுகிறது. பேச்சுவார்த்தைகளில் இந்த விடயத்தில் சமரசம் செய்யாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை கட்டுப்படுத்துவது மற்றும் ஈரானிய அரசுக்கான ஆதரவை நிறுத்துவது தொடர்பில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்க அதிகாரிகளை இஸ்ரேல் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




