உலகம் செய்தி

அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தை நிராகரித்தது ஈரான்?

அமெரிக்கா முன்மொழிந்த 15 அம்சத் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டம் மிகவும் நியாயமற்றது மற்றும் ஒருதலைப்பட்சமானது என்று ஈரானிய உயர் மட்ட தூதரக அதிகாரி ஒருவர் விமர்சித்துள்ளார்.

ஊடகங்களில் கூறப்படுவதுபோல இந்த முன்மொழிவு பயனுள்ளதாக இல்லை என்றும், இது உலக நாடுகளை திசைதிருப்பும் முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானைப் பொறுத்தவரை தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், மற்ற நாடுகளைப் போலத் தேவையில்லாமல் தனது இலக்குகளை மாற்றிக்கொள்ளாது என்றும் அந்த இராஜதந்திரி தெளிவுபடுத்தியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் ஊடாகவே அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான்மீதான தடைகள் நீக்கம்: ட்ரம்பின் 15 அம்ச திட்டம் கூறுவது என்ன?

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!