ஈரான் விவகாரம் : அவசரமாக கூடும் ஐ.நா மனித உரிமை கவுன்சில்!
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் வரும் நாட்களில் ஈரான் குறித்து அவசர அமர்வை நடத்தவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
ஈரானில் இடம்பெற்று வரும் போராட்டங்களை ஒடுக்க முன்னெடுக்கப்பட்டு வரும் ஆபத்தான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வீழ்ச்சிக் காரணமாக ஈரானில் வெடித்துள்ள போராட்டங்களால் இதுவரை 5000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் (Volker Turk) இது தொடர்பில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
அத்துடன் ஜெர்மனி மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளின் சார்பாக ஐஸ்லாந்தின் தூதர் ஐனார் கன்னர்சன் (Einar Gunnarsson) கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அதில் இந்த சூழ்நிலையின் முக்கியத்துவம் மற்றும் அவசரம் காரணமாக ஒரு சிறப்பு அமர்வு தேவைப்படுகிறது. குறிப்பாக ஆபத்தான வன்முறை, போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் நாடு முழுவதும் சர்வதேச மனித உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் வரும் நாட்களில் கூடம் என எதிர்பார்க்கப்படுகிறது.





