ஈரான் – இஸ்ரேல் போர் : 30இற்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் மூழ்கடிப்பு!
ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் போரின் போது இதுவரை 30க்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.
போரின் முதல் நாளிலிருந்து ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் 90% குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை வழிநடத்தும் அமெரிக்க அட்மிரல் பிராட் கூப்பர் (Admiral Brad Cooper) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.





