இஸ்ரேலுக்காக பணியாற்றிய நபரை தூக்கிலிட்ட ஈரான்!
இஸ்ரேலின் மொசாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை தூக்கிலிட்டதாக ஈரான் அரசு தரப்பினர் இன்று அறிவித்துள்ளனர்.
அலி அர்டெஸ்டானி (Ali Ardestani) என்ற நபரே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொசாட் அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை வழங்கியமைக்காக கிரிப்டோகரன்சி வடிவில் அவர் நிதி வெகுமதிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அந்த நபர் உளவு பார்த்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாகவும், தகவல்களை வழங்கிமைக்கு பிரதியீடாக நிதி வெகுமதிகள் உட்பட பிரித்தானிய விசாவை பெறுவார் என நம்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை அமைப்புகளும் மேற்கத்திய அரசாங்கங்களும் ஈரானில் மரண தண்டனை அதிகரித்துள்ளமை குறித்து கண்டித்து வருகின்ற சூழ்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.





