மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படும் ஐபோன் பயனர்கள் – ஆய்வில் தகவல்
																																		ஆண்ட்ராய்டு (Android) கையடக்கத் தொலைபேசி பயனர்கள் மோசடிகளால் பாதிக்கப்படுவது 58 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மோசடி மற்றும் ஸ்பேம் (Spam) குறுஞ்செய்திகளால் ஐபோன்களை விட இந்த குறைவு காணப்படுவதாக கூகிள் நிறுவனத்தால் YouGov என்ற நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளில் உள்ள 5,000க்கும் அதிகமான கையடக்கத் தொலைபேசி பயனர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த ஆய்வின் முடிவில் ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட மோசடி குறுஞ்செய்திகளை ஐஓஎஸ் (iOS) பயனர்கள் பெற்றதாகத் தெரியவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள Google Messages, Phone by Google போன்ற பயன்பாடுகள், குறுஞ்செய்திகள் வழியாக வரும் ஸ்கேம் (Scam) நடவடிக்கைகளை முடக்கும் வகையில் AI அடிப்படையிலான பல பாதுகாப்புகளைக் கொண்டுள்ளன என்பதே இதற்கான காரணமாகும்.
மாதத்திற்கு 10 பில்லியனுக்கும் மேற்பட்ட சந்தேகமான அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் ஆண்ட்ராய்டு சாதனங்கள் மூலம் தடுக்கப்படுகின்றன என்று கூகிள் தெரிவித்துள்ளது.
ஆனால் ஐஓஎஸ் சாதனங்களில் இவ்வாறான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் ஐபோன் பயனர்கள் அதிகம் ஸ்பேம் குறுஞ்செய்திகளால் பாதிக்கப்படுவதாக கூகிள் தெரிவித்துள்ளது.
        



                        
                            
