படையெடுக்கும் வெளிநாட்டவர்கள் – குடியேற்ற கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் பாலி
இந்தோனேசியாவின் பாலி நகரத்திற்கு குடியேற்ற கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் பாலிக்கு வருகைத்தந்தவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதனால் இந்தோனேசியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஆண்டின் முதல் 7 மாதத்தில் பாலிக்குப் போன சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 3.89 மில்லியனானது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் இது ஒரு மில்லியனுக்கு அதிகமாகும். அதற்கமைய, இனிமேல் கடவுச்சீட்டு விசா அனுமதி, குடியிருப்பு அனுமதி முதலியவை தீவிரமாகச் சோதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையில் முக-அடையாள தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. பாலியின் Ngurah Rai அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் அனைவருக்கும் அது பொருந்தும் என குறிப்பிடப்படுகின்றது..
சட்ட, மனித உரிமை அமைச்சுக்கான பாலி வட்டார அலுவலகம் அதனைத் தெரிவித்தது.