இட்லி கடை: ஷாலினி பாண்டேவின் அறிமுக போஸ்டர் வெளியானது

நடிகர் தனுஷின் “இட்லி கடை” திரைப்படத்தில், நடித்துள்ள நடிகை ஷாலினி பாண்டேவின் அறிமுக போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள, “இட்லி கடை” திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தத் திரைப்படத்தில், நடிகர்கள் அருண் விஜய், நித்யா மெனன், சமூத்திரக்கனி, ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் வெளியாவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், நடிகர்களின் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டரை படக்குழுவினர் வரிசையாக வெளியிட்டு புரமோஷன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ஷாலினி பாண்டே, இப்படத்தில் மீரா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)