பொழுதுபோக்கு

கலியுகத்தில் துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா… கல்கி படத்தில் அமிதாப் பச்சன்..

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் கல்கி 2898 AD.

தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தின் பட்ஜெட் மட்டுமே 600 கோடியாகும். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

கல்கி 2898 AD திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைப்பாடுகள் நடந்துவருகிறது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு மே ஒன்பதாம் தேதி ரிலீசாகிறது.

மகாபாரதத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரமான அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் கல்கி படத்தில் நடித்துள்ளார்.

அவரது அறிமுக வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமா என தன்னை அமிதாப் பச்சன் அறிமுகம் செய்யும் வீடியோ சந்தோஷ் நாராயணன் இசையில் அருமையாக வந்துள்ளது என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content