இலங்கை மீண்டெழ சர்வதேச உதவி: எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!
டித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் இறங்கியுள்ளார்.
இதற்கமைய கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் அவர் தொடர் சந்திப்புகளில் ஈடுபட்டுவருகின்றார்.
இதன் மற்றுமொரு அங்கமாக இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர், அந்தலிப் எலியாஸை (10) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சஜித் சந்தித்தார்.
இலங்கை எதிர்கொண்ட சகல இக்கட்டான தருணங்களிலும் பங்களாதேஷ் இலங்கையுடன் நெருக்கமாக செயற்பட்டமைக்கு ஒட்டுமொத்த இலங்கையர்களின் சார்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை மீண்டெழுவதற்கு தேவையான பக்க பலத்தைப் பெற்றுத் தருமாறும் பங்களாதேஷ் தூதுவரிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு முன்னர் இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளின் தூதுவர்களுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சந்திப்புகளை நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





