கனேடிய விமான நிலையங்களில் ஏற்பட்ட ஸ்தம்பிதம் தொடர்பில் வெளியான தகவல்
கனேடிய விமான நிலையங்களில் அண்மையில் ஏற்பட்ட ஸ்தம்பித நிலைமை குறித்து கனடா எல்லைச் சேவைகள் முகவரகம் விளக்கம் அளித்துள்ளது.
இணையவெளி தாக்குதல் மூலம் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பக் கோளாறு இல்லை எனவும், வழமையாக மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி நிகழ்ந்த இந்த கோளாறு வழக்கமான அமைப்பு பராமரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பப் பிரச்சனை என விளக்கப்பட்டுள்ளது.
இந்த கோளாறு சுமார் 48 மணிநேரத்திற்குள் சரி செய்யப்பட்டதாக முகவரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் விமான நிலையங்களில் தன்னியக்கச் சோதனை இயந்திரங்கள் செயலிழந்ததால், அதிகாரிகள் கைமுறையில் பயணிகள் மற்றும் பொதிகளைச் சோதிக்க வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





