ஆஸ்திரேலியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த புலம்பெயர்ந்தவர் தொடர்பில் வெளியான தகவல்
மெல்போர்னின் Mambourinஇல் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை உயிரிந்து கிடந்த நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும், அவர் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இது ஒரு கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர், மேலும் விக்டோரியா பொலிஸார் இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இறந்தவர் 36 வயதான அன்மோரல் பஜ்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் அவர் வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பாததால், அவரது மனைவி 000 அவசர எண்ணுக்கு அழைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பஜ்வா ஒரு இந்திய குடியேறி, ஆறு மற்றும் மூன்று வயதுடைய இரண்டு இளம் குழந்தைகளின் தந்தை.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், அவர் ஒரு நல்ல மனிதர், யாருடனும் சண்டையிட்டதில்லை என பஜ்வாவின் மனைவி தெரிவித்துள்ளார்.
பாஜ்வாவை கடைசியாகப் பார்த்ததாக நம்பப்படும் ஒருவரை பொலிஸார் இப்போது கைது செய்துள்ளனர்.