பிரித்தானிய மன்னரின் புற்றுநோய் சிகிச்சை தொடர்பில் வெளியான தகவல்!
பிரித்தானிய மன்னர் கிங்கின் புற்றுநோய் சிகிச்சை புத்தாண்டு வரை தொடரும் எனக் கூறப்படுகிறது.
அரண்மனை வட்டாரங்கள் கூறுகையில், “அவரது சிகிச்சை நேர்மறையான திசையில் நகர்கிறது மற்றும் நிர்வகிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை சுழற்சி அடுத்த ஆண்டு தொடரும்” என அறிவித்துள்ளன.
கிங் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சிகிச்சையைத் தொடங்குவதாகவும் பிப்ரவரி மாதம் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
மிக ஆரம்பத்தில், மன்னர் தனிப்பட்ட முறையில் தனது நோயறிதலையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள முடிவெடுத்தார். ஆனால் அவர் எந்த வகை புற்றுநோய்க்கு சிகிச்சையெடுக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.
அவர் குறிப்பாக எந்த வகையான சிகிச்சையைப் பெற்றார் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர் தனிப்பட்ட சந்திப்புகளுக்காக தொடர்ந்து லண்டனில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.