உலகம் முழுவதும் சமூக ஊடகம் பயன்படுத்தும் மக்கள் தொடர்பில் வெளியான தகவல்
உலகம் முழுவதும் சமூக ஊடகத்தை அடிக்கடி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
உலக மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கு அதிகமானோர், அதாவது சுமார் 5 பில்லியன் பேர் இவ்வாறு பயன்படுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த ஆண்டை பார்க்கிலும் அது 3.7 சதவீதம் அதிகம் என்றது ஆய்வை மேற்கொண்ட Kepios நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகில் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை நெருங்குகிறது.
5.19 பில்லியன் பேர், அதாவது உலக மக்கள்தொகையில் 64.5 சதவீதம் பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆப்பிரிக்காவின் கிழக்கு, மத்திய பகுதிகளில் 11 பேரில் ஒருவர் தான் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகிறார்.
மிக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் மூவரில் ஒருவர் சமூக ஊடகத்தில் உள்ளனர். மக்கள் நாள்தோறும் சமூக ஊடகத்தில் செலவிடும் நேரமும் 2 நிமிடங்கள் அதிகரித்துள்ளன.
அது 2 மணி நேரம் 26 நிமிடங்களாக உள்ளது. ஆனால் வட்டாரங்கள் வாரியாக வேறுபட்டுள்ளது. ஜப்பானியர்கள் தினமும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகின்றனர்.