செய்தி

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று – மருத்துவர் எச்சரிக்கை

இலங்கையில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்ஸா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மழையுடனான வானிலையை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதெனவும், காய்ச்சல், இருமல், வாந்தி மற்றும் தடிமன் உள்ளிட்டவை இதற்கான அறிகுறிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்புளுவென்ஸா A மற்றும் இன்புளுவென்ஸா B வைரஸ் பரவல் இந்த காலப்பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளன. அவற்றில் குளிர்ச்சியான நாடுகளில் காணப்படும் இன்புளுவென்ஸா A வைரஸ் தொற்று அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் தொற்று ஏனையோருக்கு பரவும் அபாயம் காணப்படுவதால் தொற்று இனங்காணப்பட்ட நபர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

நோய் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள வைத்தியரை உடனடியாக நாடுமாறும் அவர் கோரியுள்ளார்.

வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கைகளை கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனக் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!