ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் அதிரடியாக கைது
நடிகை ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் மீது பணமோசடி தொடர்பாக புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசால் சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
தினேஷ் மீது, திருநெல்வேலி மாவட்டம், பணகுடி ஊரைச் நேர்ந்த கருணாநிதி என்ற நபர் பண மோசடி புகார் அளித்துள்ளார்.
நடிகர் தினேஷ் கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் ரூ. 3 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, தனது மனைவிக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். ஆனால், சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திரும்பி தரவுவில்லை.
இதுகுறித்து பல முறை நான் தொலைபேசியில் கேட்ட போதும் பணத்தை தராமல் ஏமாற்றியதாக கூறியுள்ளார். இதையடுத்து, கடந்த மாதம் தினேஷுக்கு போன் செய்து பணத்தை கேட்டேன். அப்போது அவர் சாத்தான்குளம் வருவதாகவும் அப்போது பணத்தை தருவதாகவும் என்னிடம் கூறினார். அவர் கூறியதை நம்பி நான், தனியாக அவரை சந்திப்பதற்காக சென்றேன்.
அப்போது தினேஷ், இரண்டு ஆட்களுடன் வந்திருந்தார். தினேஷின் அப்பாவும் தினேசும், ஆபாசமான வார்த்தைகளால் பேசி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்து என்னை நெஞ்சில் தாக்கியதாக பணகுடி போலீசில் புகார் அளித்தார்.
கருணாநிதி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் நடிகர் தினேஷ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பின் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
இதுகுறித்து பேசிய தினேஷ், கடந்த நான்கு வருடமாக, சினிமாவில் ஒரு மேரேஜர் அழகப்பன் மற்றும் செல்வின் இவர்கள் என்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் என்னுடைய கம்பெனி செக்கை எடுத்து மோசடி செய்தார்கள். இந்த வழக்கை கடந்த நான்கு வருடமாக நேர்மையாக வள்ளியூர் நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறேன். அந்த செல்விலின் தூண்டுதலின் பெயரில் தான் இந்த மோசடி வழக்கும் என் பெயரில் போடப்பட்டுள்ளது.
என்னிடம் இருக்கும் ஆதாரங்களை பணகுடி போலீசாரிடம் சமர்ப்பித்தேன். அனைத்து ஆதாரங்களையும் பார்த்த போலீசார் தேவைப்பட்டால் போனில் அழைக்கிறோம் என சொந்த ஜாமீனில் என்னை விடுவித்தார்கள் என நடிகர் தினேஷ் கூறியுள்ளார்.






