பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்குவது போர்க்குற்றம்: போப் பிரான்சிஸ்
பொதுமக்களை கண்மூடித்தனமாக தாக்குவது போர்க்குற்றம், ஏனெனில் அது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும் என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் காஸா நிகழ்வுகள் இதற்கு தெளிவான சான்று. சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பாரிய மீறல்கள் போர்க்குற்றங்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது, அவற்றைச் சுட்டிக்காட்டினால் மட்டும் போதாது, அவற்றைத் தடுப்பதும் அவசியம்.
மனிதாபிமானச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் அமுல்படுத்துவதற்கும் சர்வதேச சமூகத்தின் தரப்பில் அதிக முயற்சி தேவைப்படுகிறது, இது போர்ச் சூழ்நிலைகளில் மனித கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகத் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)