சத்தீஸ்கரில் திறக்கப்படவுள்ள இந்தியாவின் முதல் டிஜிட்டல் அருங்காட்சியகம்
பழங்குடி சுதந்திர வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் முதல் டிஜிட்டல் அருங்காட்சியகம் சத்தீஸ்கரில்(Chhattisgarh) உள்ள நவ ராய்ப்பூர் அடல் நகரில்(Nava Raipur Atal Nagar) நிறுவப்பட்டுள்ளது.
இது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய பழங்குடி வீரர்களின் வீரம் மற்றும் தியாகங்களை வெளிப்படுத்துகிறது.
ஷாஹீத் வீர் நாராயண் சிங்(Shaheed Veer Narayan Singh) நினைவு மற்றும் பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) திறந்து வைப்பார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 ஏக்கர் நிலத்தில் ரூ.50 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகம், சோனகானின் நில உரிமையாளரும், பிரிட்டிஷ் ஒடுக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியைத் தலைமை தாங்கிய சத்தீஸ்கரின் முதல் தியாகியான சுதந்திரப் போராட்ட வீரருமான ஷாஹீத் வீர் நாராயண் சிங்கிற்கு அஞ்சலி செலுத்துகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹல்பா கிளர்ச்சி(Halba Rebellion), சர்குஜா கிளர்ச்சி(Sarguja Revolt), போபால்பட்டணம்(Bhopalpatnam), பரல்கோட்(Paralkot), தாராபூர்(Tarapur), லிங்ககிரி(Lingagiri), கோய்(Koie), மேரியா(Meria), முறியா(Muria), ராணி சௌரிஸ்(Rani Chauris), பூம்கல்(Bhumkal) மற்றும் சோனகான்(Sonakhan) இயக்கங்கள் உட்பட பிராந்தியத்தின் முக்கிய பழங்குடி எழுச்சிகளையும் இந்த அருங்காட்சியகம் விவரிக்கிறது.





