சிங்கப்பூரில் மாணவி துஷ்பிரயோக வழக்கில் இந்திய இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை!
சிங்கப்பூரில் பல்கலைக்கழக மாணவியை வன்கொடுமை செய்த இந்தியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் துப்பரவு பணியாளராக வேலைப் பார்த்த இந்தியாவைச் சேர்ந்த சின்னையா என்ற நபர் கடந்த 2019 ஆம் ஆண்டில் பாதையில் நடந்துச் சென்ற மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் சின்னையா கைது செய்யப்பட்டுள்ளார்.இக் குற்றச் செயலுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறை தண்டனையையும் 12 கசையடிகளையும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.





