பிரிட்டனில் இந்திய உணவக மேலாளர் சாலை விபத்தில் பலி – 8 பேர் கைது!
																																		பிரித்தானியாவில் இந்தியாவைச் சேர்ந்த உணவக மேலாளர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் ரீடிங் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேலாளராக இந்தியாவைச் சேர்ந்த விக்னேஷ் பட்டாபிராமன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.இவர் கடந்த 14ம் திகதி தனது மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சைக்கிளின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த விக்னேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தேம்ஸ் பொலிஸார், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயது நபரை கைது செய்துள்ளனர்.
அவருக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டதாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
        



                        
                            
