செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபருக்கு 6 வருட சிறைத்தண்டனை

அமெரிக்காவில் அரசு அதிகாரியாக நடித்து முதியோர்களிடம் இருந்து 17 கோடி வரை மோசடி செய்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

நியூ ஜெர்சி மாகாணத்தில் வசித்து வந்த 33 வயது பிரணவ் படேல் என்ற இந்திய வம்சாவளி, கால் சென்டர்கள் மூலம் முதியோர்களை குறி வைத்து மிரட்டி, பணம் மற்றும் நகைகளை பறித்து வந்துள்ளார்.

கருவூலத்துறை அல்லது அரசின் பிற ஏஜன்சிகளைச் சேர்ந்த அதிகாரிகள் என்று முதியோர்களை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘உங்கள் மீது குற்ற நடவடிக்கைக்காக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யாமல் இருக்க உங்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளை எங்களிடம் விசாரணைக்கு கொடுக்க வேண்டும்,’ என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அந்த வகையில் ஒரு வீட்டில் நகை உள்ள பெட்டியை பெறுவதற்காக சென்ற அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பண மோசடி மற்றும் பணத்தை சட்டவிரோதமாக கைமாற்றுதல் போன்ற குற்றங்களுக்காக பிரணவ் படேல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பிரணவ் படேலுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி