கனடாவில் கொலை வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
2022ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு கனடா நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தின் நடுவர் மன்றம், பால்ராஜ் பாஸ்ராவை(Balraj Basra) முதல் நிலை கொலை மற்றும் தீ வைப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.
அக்டோபர் 17, 2022 அன்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கோல்ப்(Golf) மைதானத்தில் விஷால் வாலியா(Vishal Walia) என்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் குற்றவாளிகளால் ஒரு வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, 24 வயது இக்பால் காங்க்(Iqbal Kang), 21 வயது டீன்ரே பாப்டிஸ்ட்(Deandre Baptiste) மற்றும் 25 வயது பல்ராஜ் பஸ்ரா((Balraj Basra) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கொலை மற்றும் தீ வைப்பு வழக்கில் இக்பால் காங்கிற்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் டீன்ரே பாப்டிஸ்டுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.





