ஆஸ்கருக்கான தேர்வான இந்திய பரிந்துரை ஆவணப்படம்… குவியும் வாழ்த்துக்கள்!
ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த ஆவணப்பட பிரிவுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவில் எடுக்கப்பட்ட ‘டூ கில் எ டைகா்’ ஆவணப்படம் இடம் பெற்றுள்ளது. பலரும், இயக்குநருக்கும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் ஆங்கிலத்தில் வெளியாகும் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் ஆவணப்படங்களுக்கான விருதுகளுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து திரைப்படங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டுக்கான ஆஸ்கா் விருதுகள் வழங்கும் விழா வரும் மாா்ச் 10ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கடந்த 2023ம் ஆண்டு ஆஸ்கா் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சிறந்த ஆவணப்பட பிரிவுக்கு ‘டூ கில் எ டைகா்’ என்ற இந்தியப்படம் இடம்பெற்றுள்ளது.
கனடாவில் வசித்து வரும், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிஷா பஹுஜா என்பவர் இயக்கிய இந்த ஆவணப்படம், பாலியல் வன்கொடுமைக்குள்ளான மகளுக்காக நீதிப் பெற்றுத் தர போராடும் இந்திய குக்கிராமத்தைச் சோ்ந்த தந்தையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.கடந்த 2022ஆம் ஆண்டு டொரன்டோ சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, இந்த ஆவணப்படம் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. அதோடு, சர்வதேச கவனமும் ஈர்த்தது. இந்நிலையில், இப்படம் ஆஸ்கருக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு சிறந்த ஆவணப்பட பிரிவில், தமிழகத்தின் முதுமலையைச் சோ்ந்த பொம்மன்-பெள்ளி யானை காப்பாளா் தம்பதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தி எலிஃபென்ட் விஸ்பெரா்ஸ்’ ஆஸ்கா் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
திரைப்படப்பிரிவை பொறுத்தவரை, கிறிஸ்டபர் நோலன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஓப்பன்ஹெய்மர் 13 ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்படம் பெரும்பாலான விருதுகளை அள்ளிக்குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.