இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு 15 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 01 கிலோ 556 கிராம் குஷ் ரக போதைப்பொருளுடன் வந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் 36 வயதுடையவர் ஆவார்.
தாய்லாந்தின் பேங்காக்கில் குஷ் போதைப்பொருட்களை வாங்கிய அவர், பின்னர் இந்தியாவின் பெங்களூருக்கு வந்து, பின்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் 03 பொதிகளில் குஷ் ரக போதைப்பொருளை வைத்திருந்ததாகத் தெரியவந்துள்ளது.
(Visited 4 times, 1 visits today)