பொழுதுபோக்கு

Indian 2 முதல் நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2. பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் பெற்ற ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த கணிப்பை இந்த தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

படம் பார்த்த ரசிகர்கள் பலரும் கூறியது, இந்தியன் 2 படம் இந்தியன் 3 படத்திற்கான ஒரு லீட் மட்டும்தான். இது மட்டும் இல்லாமல், படத்தின் முதல் பாதி சுமாராகவே உள்ளது என்றும், இரண்டாம் பாதி சிறப்பாக உள்ளது என்றும் கூறியிருந்தனர்.

மேலும் இந்தியன் 2 படத்தில் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை மைய்யப்படுத்திதான் படம் எடுக்கப்பட்டுள்ளது எனும்போது, தமிழ்நாட்டில் நடைபெறும் ஊழல், லஞ்சம் குறித்து இன்னும் தைரியமாக பேசியிருக்கலாம் என கூறுகின்றனர்.

திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்து தகவல்களைப் பதிவிடும் சாக்நிக் வலைதளம், இந்தியாவில் இந்தியன் 2 படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்திருக்கும் என பதிவிட்டுள்ளது. அதில், முதல் நாளில் இந்தியன் 2 இந்தியா முழுவதும் சுமாராக ரூபாய் 26 கோடி வசூல் செய்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் படத்தின் வசூல் விபரம் இதுவரை தெளிவாக வெளியாகவில்லை.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content