சர்வதேச கடற்பகுதிகளில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் இந்தியா!
இந்தியா தனது பாதுகாப்புக் கொள்கையை எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான தனது நில எல்லைகளில் கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன் உலகளாவிய அபிலாஷைகள் விரிவடைவதால், அது சர்வதேச கடற்பரப்பில் தனது கடற்படை சக்தியை வலுவடைய செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.
இதன்படி ஹுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கப்பல்களை பாதுகாப்பற்றாக 03 வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான்கள் மற்றும் உளவு விமானங்களை செங்கடல் பகுதிக்கு இந்தியா அனுப்பியுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்படைக் கட்டளைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற துணை அட்மி அனில் குமார் சாவ்லா, நீங்கள் உலக வல்லராசாக விரும்பினால் கடற்பகுதியில் கடல்சார் சக்தியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே இதற்கு ஏற்றவகையில் இந்தியாவின் கடற்பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்துள்ளது.
உலகிற்கு கடல்சார் பாதுகாப்பில் ஒரு பரந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான அதன் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், சீனாவுடனான போட்டிகளுக்கு மத்தியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.