இந்தியா செய்தி

இந்தியா, மலேசியாவுக்கிடையில் 11 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்தியா India மற்றும் மலேசியாவுக்கிடையில் Malaysia 11 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்திய பிரதமர் மோடி Modi மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் Anwar Ibrahim ஆகியோர் முன்னிலையிலேயே மேற்படி ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டன.

பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, ஊழல் தடுப்பு நடைமுறைகள் மற்றும் ஐ.நா. அமைதிப் படைக்கு பங்களிப்பது உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்றுவது தொடர்பான ஒப்பந்தங்களே இவையாகும்.

கோலாலம்பூரில் செயல்படும் மலேசிய பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும்.

மலேசிய மாணவர்களுக்கு திருவள்ளுவர் கல்விஉதவித் தொகை வழங்கப்படும்.

இந்தியாவின் யுபிஐ, மலேசியாவின் பேநெட் பணப் பரிமாற்ற நடைமுறைகள் ஒன்றிணைக்கப்படும்,

ஆயுர்வேத ஆராய்ச்சியில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்.

மலேசியாவின் சாபா பகுதியில் புதிதாக இந்தியதூதரகம் திறக்கப்படும் ஆகிய 5 அறிவிப்புகளும் இதன்போது வெளியிடப்பட்டன.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட மலேசிய பிரதமர், உக்ரைன்- ரஷ்யா போர், மத்திய கிழக்கு விவகாரம் ஆகியவற்றில் அமைதியை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் மோடியை பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!