பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் கடன்களை தடுக்கும் முயற்சியில் இந்தியா

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் மானியங்களை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு பணம் வழங்குவது பயங்கரவாதத்தை தூண்டுகிறது என்று இந்தியா கூறியுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கான அணுகலும் இந்தியாவில் தடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பாகிஸ்தான் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல வீரர்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான், வாசிம் அக்ரம் மற்றும் இம்ரான் கான் ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கான அணுகல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.