இலங்கையில் வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரிப்பு!
இலங்கையில் பதிவாகும் மரணங்களில் நான்கில் ஒரு பங்கு மரணங்கள் வீதி விபத்துக்களால் ஏற்படுகிறது என வீதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான வீதி விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படுவதாக போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் வருடத்திற்கு சுமார் 12,000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்த அவர், இந்த இறப்புகளில் நான்கில் ஒரு பங்கு மரணங்கள் போக்குவரத்து விதி மீறல்களால் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். தோராயமாக தினம்தோறும் 7-8 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இவ்வருடத்தின் முதல் 08 மாத காலப்பகுதியில் 1427 மரணங்கள் வீதிவிபத்தினால் ஏற்பட்டுள்ளதாவும், பிரதி பொலிஸ் மா அதிபர் ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த 08 மாத காலப்பகுதியில் 600இற்கும் மேற்பட்ட மோட்டார் வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வீதி விபத்துக்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், 94 பேருந்து சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.