தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழகத்தில் 19ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்கிறார்கள்.
இந்த நிலையில், தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
(Visited 16 times, 1 visits today)