செய்தி வட அமெரிக்கா

கனடாவை உலுக்கிய சம்பவம் – 6 இலங்கையர்கள் பலி – சிக்கிய சந்தேக நபர்

கனடாவில் – ஓட்டாவாவில் வசித்துவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை ஓட்டாவா பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குடும்பத்தினர் அண்யைிலேயே கனடாவில் குடியேறியுள்ளனர். இந்நிலையிலேயே இவ்வாறானதொரு கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 35 வயதுடைய தர்ஷனி ,ஏழு வயது இனுகா விக்கிரமசிங்க, நான்கு வயதுடைய அஷ்வினி விக்ரமசிங்க, இரண்டு வயதுடைய ரின்யான விக்கிரமசிங்க, இரண்டரை மாத குழந்தையான கெல்லி விக்ரமசிங்க என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 40 வயதுடைய அமரகோன்முபியாயன்சேலா கெ காமினி அமரகோன் என்பவரும் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைவரும் இலங்கையர்கள் என ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

தந்தை உயிர் பிழைத்ததாகவும், ஆனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் கூறிய உயர் ஸ்தானிகர், இலங்கையில் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது இதுவரையில் தெரியவரவில்லை. உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் வயது என்பன தொடர்பில் அதிகாரிகள் தகவல் வெளியிடவில்லை.

Ottawa homicide: 6 people dead, including a mother and four children, in 'mass killing' at a Barrhaven home | CTV News

சந்தேக நபர்

 

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி