ஹீரோவாக களமிறங்கும் துணை முதல்வரின் மகன்
நடிகரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியலுக்கு வந்ததும் சினிமாவிலிருந்து விலகினார். இதையடுத்து, உதயநிதியின் மகன் நடிப்பு உலகுக்கு வருகின்றார்.
தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும், இன்பநிதியின் முதல் திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் இவர் சினிமாவுக்கு வருவது மட்டும் உறுதியாகி உள்ளது.

(Visited 8 times, 1 visits today)





