நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் வீடுகளில் சோதனை செய்ய உரிமைக் கோரும் குடியேற்ற முகவர்கள்!
நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் தனியார் வீடுகளில் சோதனை செய்யும் அதிகாரத்தை அமெரிக்க ICC குடியேற்ற முகவர்கள் கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது நீண்டகாலமாக நிறுவப்பட்ட வழிகாட்டுதலிலிருந்து விலகி அவர்கள் சுயாதீனமாக செயற்பட வழிவகுப்பதை காட்டுகிறது.
ICE செயல் இயக்குனர் டாட் லியோன்ஸ் (Todd Lyons) பிறப்பித்த புதிய உத்தரவு, முகவர்கள் வீடுகளுக்குள் பலவந்தமாக நுழைந்து தனிநபர்களை கைது செய்ய அனுமதிக்கிறது.
இந்தக் கொள்கை நான்காவது திருத்தப் பாதுகாப்புகளுடன் நேரடியாக முரண்படுகிறது மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு வழங்கப்பட்ட பல ஆண்டுகால ஆலோசனையை இரத்து செய்வதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மாற்றம், புதிய ICE அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இது ஏற்கனவே உள்ள பயிற்சிகளுக்கு முரணானதாகும்.





