மெக்சிகோவில் அகற்றப்பட்ட குடியேற்ற முகாம் : இலஞ்சம் கொடுக்க முற்பட்டதால் பரபரப்பு!
மெக்சிகோ ஃபெடரல் குடியேற்ற அதிகாரிகள் மெக்சிகோ நகரத்தின் மிகப் பெரிய டவுன்டவுன் கூடாரத்தில் குடியேறியவர்களின் முகாம்களில் ஒன்றை அகற்றியதாகக் கூறினர்.
குறித்த கூடாரத்தை அமைப்பதற்காக அவர்கள் அடையாளம் காணாத ஒரு அதிகாரிக்கு $12 முதல் $35 வரை லஞ்சம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக தேசிய குடியேற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
முகாமில் இருந்த 432 புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோவில் தங்குவதற்கு ஒருவித விசாவைப் பெற்றதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் அவர் கூடாரத்தில் இருந்து வெளியேற ஒப்புக்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுமார் 99 புலம்பெயர்ந்தோர் குடிவரவு அலுவலகங்கள் அல்லது தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஹைட்டியைச் சேர்ந்தவர்கள், எஞ்சியவர்கள் வெனிசுலா அல்லது மத்திய அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை இந்த வார தொடக்கத்தில் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோருக்கு குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்தார், இது மெக்சிகோவில் அதிகமான புலம்பெயர்ந்தோர் விண்ணப்பிக்க வழிவகுக்கும்.