பொழுதுபோக்கு

நடிகர் ராஜ்கிரணுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து இருக்கின்றேன்… ரவீந்தர் புது செய்தி

நடிகர் ராஜ்கிரணுக்கு தான் பணம் கொடுத்திருந்ததாகவும், தான் சிறைக்குச் செல்லும் சூழலில் சிக்கியிருந்த நேரத்தில் பணத்தை கேட்டு மெசேஜ் பண்ண அவர் உதவவே இல்லை என ரவீந்தர் சந்திரசேகரன் பகீர் கிளப்பி உள்ளார்.

தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரன் 4 படங்களை தயாரித்து வருவதாகவும், அதில் பல நடிகர்களுக்கு சம்பளம் மற்றும் அட்வான்ஸ் கொடுத்த நிலையில் தான் தன்னிடம் வாங்கிய 16 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என அவர் மீது புகார் அளித்ததாக அவரே பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனால், ஈஸ்வரன் பட தயாரிப்பாளர் பணத்தை வாங்கி எந்த நடிகருக்கு கொடுத்தேன் என ஏதாவது சான்று அவரிடம் இருக்கிறதா என்று கேட்டு விளாசி உள்ளார்.

மேலும், படம் எடுப்பதற்காக பலரிடம் ஃபைனான்ஸ் வாங்கியதும் கடனில் இருப்பதும் உண்மை தான் என்றும் நடிகர் ராஜ்கிரண் ஒரு படத்தில் நடிக்க பல லட்சம் ரூபாயை அட்வான்ஸாக கொடுத்துள்ளேன் என்றும் கூறினார்.

இக்கட்டான சூழலில் என்னை கைது செய்து உள்ளே வைக்கப் போவதை அறிந்து கொண்டு நடிகர் ராஜ்கிரணிடம் அட்வான்ஸாக கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் படி கேட்டிருந்தேன்.

ஆனால், அவர் திருப்பித் தரவில்லை என மெசேஜையும் காட்டி பகீர் கிளப்பி உள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன். ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸாக வாங்கிய தொகையை நடிகர்கள் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை தான்.

ஆனால், தயாரிப்பாளர் தலையே ஆபத்தில் இருக்கும் போது, அவசரத்துக்கு கேட்கும் போதும் அவர் கொடுக்காதது தனக்கு வருத்தம் தான் என்றும் ரவீந்தர் பேசியுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்