அந்த படத்தில் யாஷ் நடிப்பதால் தான் நான் நடிக்கவில்லை… ஸ்ரீநிதி அதிர்ச்சி

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உலகளவில் வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி.
தமிழில் இவர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ படத்தின் மூலம் அறிமுகமானார். கே.ஜி.எப் படத்தின் வெற்றிக்கு பின் இவர் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக் கொண்டார்.
தற்போது, நானியுடன் ஹிட் 3 படத்தில் நடித்துள்ளார். இதனால் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஸ்ரீநிதி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ” ரன்பீர் கபூரும் சாய் பல்லவியும் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நடித்து வரும் ராமாயணத்தில் சீதை வேடத்தில் நடிக்க ஆடிஷனில் நான் தான் முதலில் கலந்து கொண்டேன்.
தயாரிப்பாளர்களுக்கும் எனது நடிப்பு பிடித்திருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், கேஜிஎப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த யாஷ், இந்த படத்தில் ராவணனாக நடிப்பதால் நான் இந்த படத்தில் நடிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.