பொழுதுபோக்கு விளையாட்டு

ISPL கிரிக்கெட்: சென்னை கிரிக்கெட் அணியை வாங்கினார் சூர்யா

ஸ்ட்ரீட் கிரிக்கெட் டி10 போட்டி விளையாட்டான ISPLT10ல் சென்னை அணியின் ஓனராக மாறியுள்ளார் நடிகர் சூர்யா. சினிமாவை தாண்டி கிரிக்கெட் மீதும் நடிகர்கள் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், சூர்யா டி10 கிரிக்கெட் போட்டி மீது ஆர்வத்தை செலுத்தியிருக்கிறார்.

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.

இந்தத் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்த டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடரின் அனைத்துப் போட்டிகளும் கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இத்தொடரில் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகரைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்த நிலையில், சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே, மும்பை அணி உரிமத்தை அமிதாப் பச்சன், ஹைதராபாத் உரிமத்தை ராம் சரண், பெங்களூரு உரிமத்தை ஹிருத்திக் ரோஷன், ஜம்மு – காஷ்மீர் அணியின் உரிமத்தை அக்சய் குமார் வாங்கியுள்ளனர்.

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) போட்டியில் பங்குபெறும் அணி ஒன்றில் 16 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு அணிக்கு உதவிப் பணியாளார்கள் 6 பேர் இருக்கலாம். ஒவ்வொரு அணிக்கும் ஒரு கோடி ரூபாய் ஏலத் தொகையாக வழங்கப்படும்.

வீரர்களுக்கான ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர் ஒருவருக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது.

சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களைப் போன்று விளையாட வேண்டும் என்ற கனவோடு உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்காக இந்தப் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்