பொழுதுபோக்கு

15 வயதில் குழந்தை பெற்ற ஐஸ்வர்யா ராய்? நான் தான் “மகன்” கிளம்பியது புது சர்ச்சை

பாலிவுட் உலகில் கடந்த சில காலமாக பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்பதுதான்.

அதில் உண்மை இல்லை என்று கூறப்பட்டாலும் தொடர்ந்து அந்த கிசுகிசு பரவியேவருகிறது. இது குறித்து இருவருமே தங்களது செயல்பாடுகள் மூலம் பதிலளித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் பீக்கில் இருந்தபோது நடிகர் சல்மான் கானை காதலித்தார். சில வருடங்கள் இரண்டு பேருமே தீவிரமாக காதலித்தார்கள். நிச்சயம் திருமணம் செய்துகொள்வார்கள் என்று ஆரூடம் கூறப்பட்ட சூழலில் தங்களுக்குள் ஒத்துவராததால் இருவரும் பிரிந்தனர்.

அதற்கு காரணம் சல்மான் கான் ஐஸ்வர்யாவை ரொம்பவே டார்ச்சர் செய்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.

இருந்தாலும் தங்களது பிரிவு குறித்து இருவருமே எதுவும் பேசவில்லை. சல்மானுடனான பிரிவுக்கு பிறகு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

இது ஒருபக்கம் இருக்க திருமணத்தின்போது போடப்பட்ட மோதிரத்தை ஐஸ்வர்யா கழற்றிவிட்டார்; எனவே விவாகரத்து உறுதி என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்த மோதிரத்தை போட்டுக்கொண்டு பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் சமீபத்தில் அமிதாப் பச்சனின் பிறந்தநாளுக்குக்கூட தனது வாழ்த்தினை தெரிவித்து விவாகரத்து சர்ச்சையை கிளப்பியவர்களை கப் சிப் என்று ஆக்கினார்.

இந்நிலையில் புதிய பரபரப்பு ஒன்று உருவாகியிருக்கிறது. அதாவது சங்கீத் குமார் என்ற ஒருவர் தான் ஐஸ்வர்யா ராயின் மகன்; அவருக்கு 15 வயது இருக்கும் போது திருமணம் ஆவதற்கு முன்பே அவருக்கு நான் IVF In Fertilization மூலம் லண்டனில் பிறந்தேன்.

அதற்கு ஐஸ்வர்யா ராயின் பெற்றோர் என்னை விசாகப்பட்டினத்துக்கு அழைத்து சென்று வளர்த்தார்கள் என்று கூறுகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த நபருக்கு மனநிலை சரியில்லை. அதனால்தான் அப்படி கூறுகிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்