அமெரிக்காவை தாக்கும் சூறாவளி – 35 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு!
அமெரிக்காவை இந்த வார இறுதியில் வெடிகுண்டு சூறாவளி (bomb cyclone) தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதீத பனிப்பொழிவு மற்றும் உறைப்பனி நிலை காரணமாக சுமார் 35 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர வானிலை நிகழ்வு 18 மாநிலங்களை பாதிக்கும் என்றும், கடற்கரை பகுதிகளில் வசிப்பர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக பரவலான பயண இடையூறுகள், மின் தடைகள் மற்றும் உறைபனி மற்றும் தாழ்வெப்பநிலை அபாயங்களுக்கு தயாராக இருக்குமாறு அதிகாரிகள் குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.





