அமெரிக்காவை உலுக்கிய சூறாவளி – 27 பேர் மரணம் – 300,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென வீசிய சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கெண்ட்டக்கி, மிஸொரி மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிஸொரி மாநிலத்தின்செயின்ட் லூயிஸ் நகரில் மட்டும் சுமார் 5,000 கட்டடங்கள் சேதமாயின. மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட தடையால் 300,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
மக்கள் அடைக்கலம் நாடுவதற்கு நிவாரண நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
தற்போது கெண்ட்டக்கி, மிஸொரி ஆகியவற்றில் மீட்புப் பணி தொடர்கிறது.
(Visited 16 times, 1 visits today)





