இலங்கை செய்தி

அவசரகால சட்டம் நீடிப்பு குறித்து மனித உரிமை ஆணைக்குழு ஆராய்வு!

“அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் போது, முன்னர் குறிப்பிட்ட அவதானிப்புகள் பின்பற்றப்பட்டனவா என்பது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.”

இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரான, நிமல் ஜி. புஞ்சிஹேவ மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

“நாங்கள் தற்போது நீடிக்கப்பட்ட அவசர நிலைகளை ஆய்வு செய்து வருகிறோம். எங்கள் ஆய்வு முடிந்ததும், எங்கள் அவதானிப்புகள் இணங்கியிருந்தால், நாங்கள் ஒரு அறிக்கையை வெளியிடுவோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டித்வா பேரிடரின் பின்னர் 2025 நவம்பர் 28 ஆம் திகதி அவசரகால நிலை முதலில் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின்னர் அது ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டுவருகின்றது.

அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு கூடிப்பதற்கு கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

எனினும், அவசரகால சட்டம் நீடிப்புக்கு எதிரணி எடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

ஆனால் அத்தியாவசிய தேவைகளை தடையின்றி முன்னெடுக்கவே அச்சட்டம் நீடிக்கப்படுகின்றது எனவும், அடக்குமுறைக்காக அது கையாளப்படவில்லை எனவும் ஆளுங்கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவசரநிலை விதிகள் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தது.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்கனவே கடிதமும் அனுப்பட்டிருந்தது.

பல விதிகள் அரசியலமைப்பு விதிகள் மற்றும் சர்வதேச மனிதஉரிமைக் கடப்பாடுகளுடன் பொருந்தவில்லை என்றும் கூறியிருந்தது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!