இலங்கை

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்!புலனாய்வாளர்களின் அத்துமீறிய செயற்பாடு- வேடிக்கை பார்த்த பொலிசார்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முதலாம் நாள் அகழ்வாய்வுப்பணிகள் செப்டெம்பர் (06) இன்றையதினம் இடம்பெற்றிருந்தது.

இவ்வாறு இடம்பெற்ற முதலாம்நாள் அகழ்வாய்வுப் பணிகள் முடிவுறுத்தப்பட்டு அகழ்வாய்விற்கென வருகைதந்த அனைத்துத் தரப்பினரும் வெளியேறி, குறித்த பகுதி பொலிசாரின் ஆளுகையின் கீழ் வந்ததன் பின்னர், மனிதப் புதைகுழி வளாகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் குறித்த பகுதியை புகைப்படம் எடுத்துள்ளனர்.

ஏற்கனவே இந்த கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையின்போது குறித்த பகுதியில் புலனாய்வளார்களின் அச்சுறுத்தல் நிலைமை தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந் நிலையில் அகழ்வாய்வின் முதலாம் நாளே இவ்வாறு, பொலிஸ் பாதுகாப்பின் மத்தியிலும் புலனாய்வாளர்களின் அத்துமீறல் செயற்பாடு பதிவாகியிருப்பது, இந்த அகழ்வாய்வு தொடர்பிலும், பொலிசாரின் செயற்பாடு தொடர்பிலும் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 24 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்