இலங்கை செய்தி

டீசல் விலை குறைந்தால் மட்டுமே பஸ் கட்டணம் குறையும்

 

எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் பஸ்கட்டணங்களை குறைப்பதானால்; டீசல் லீற்றருக்கு மேலும் 20 ரூபாவால் குறைக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விலை குறைப்போடு ஒப்பிடும்போது பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என்றும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறைக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமா என்பது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தற்போது குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைக்கேற்ப பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்கான வாய்ப்பு கிடையாது அவ்வாறு பஸ் கட்டணம் குறைக்கப்படுமானால் பஸ் போக்குவரத்து சேவையிலிருந்து விலகிக்கொள்ள நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை