சினிமாவில் மாயமான ஹ்ருதிஹாசன் மீண்டும் களத்தில்!
நடிகை ஸ்ருதிஹாசன் Shruti Haasan ஒரு கால கட்டத்தில் தமிழ் சினிமாவை கலக்கியவர். கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்து இளைஞர்களின் இதயங்களை ஆக்கிரமித்தவர்.
எனினும், 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அவரது காட்டில் மழையே இல்லை.
தமிழ் சினிமா உலகில் இருந்து காணாமல்போனவராகக் கருதப்பட்டார். தற்போது மீண்டும் களத்துக்கு வந்துள்ளார்.
எனினும், நடிகை ஸ்ருதிஹாசன், துல்கர் சல்மான் ஜோடியாக ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற படத்தில் தற்போத நடித்து வருகிறார்.
தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இப்படத்திலிருந்து அவருடைய தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் அளித்த நேர்காணலில்,
“ பாடுவது, இசையமைப்பது, எழுதுவது, நடிப்பு ஆகிய துறைகளில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.
2018-ல் நடிப்பிலிருந்து சில காலம் இடைவெளி எடுத்துக் கொண்டது பற்றி கேட்கிறார்கள். அந்த இடைவெளி, நான் யார் என்பதை மறுமதிப்பீடு செய்து, என்னை நானே ஆராய்வதற்கான நேரமாக இருந்தது. சில மனநலப் பிரச்சினைகளுக்காகவும் நேரம் எடுத்துக்கொண்டேன்.” ஏன்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது ஒரு கலைஞராக இருப்பதை மிகவும் விரும்புகிறேன். அது மகிழ்ச்சியைத் தருகிறது.
வழக்கமான கதாபாத்திரங்களை விடுத்து சவாலான வேடங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறேன் எனவும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.





