பொழுதுபோக்கு

கங்குவா படத்தை பார்த்து முக்கிய பிரபலம் வெளியிட்ட செய்தி என்ன தெரியுமா?

சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானியும், வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர்.

சரித்திர கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமான இதில் நடிகர் சூர்யா பல்வேறு கெட் அப்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார்.

கங்குவா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வெற்றி இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். கங்குவா படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி ஆயுதபூஜை விடுமுறையில் திரைக்கு வர உள்ளதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது கங்குவா திரைப்படத்தின் பின்னணி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே கங்குவா படத்தின் சிறப்பு காட்சிகளை ஒருசிலருக்கு மட்டும் திரையிட்டுக் காட்டி இருக்கிறார் சிறுத்தை சிவா, அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கங்குவா படத்தின் முதல் பாதி மட்டுமே தான் பார்த்ததாகவும் அதுவே வேற லெவலில் இருந்ததாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

இந்த நிலையில், அவரைத் தொடர்ந்து கங்குவா படத்தை முழுவதுமாக பார்த்த பிரபல பாடலாசிரியர் விவேகா, தனது விமர்சனத்தை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது : “’கங்குவா’ படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார். சூர்யா சாரின் நடிப்பு உச்சம்… இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என கூறி இருக்கிறார். பாடலாசிரியர் விவேகா கொடுத்துள்ள பாசிடிவ் விமர்சனத்தால் கங்குவா படத்தின் மீதான் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content