கேப்டன் மில்லர் படம் எப்படி இருக்கு.. முதல் விமர்சனம் இதோ..
தனுஷ் கெரியரில் கேப்டன் மில்லர் திரைப்படம் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. மிகவும் வித்தியாசமான தோற்றத்தில், மாறுபட்ட கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.
ஒரு பக்கம் கமர்ச்சியால் சினிமாவையும், மறுபக்கம் கலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.
வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
வருகிற 12ஆம் தேதி உலகளவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. வெளிநாடு சென்சார் போர்டு உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.
இதில் ‘கேப்டன் மில்லர் பைசா வசூல் திரைப்படம். வழக்கம் போல் தனுஷ் மிரட்டிவிட்டார்’ என கூறியுள்ளார். மேலும் கேப்டன் மில்லர் படத்திற்கு 3.5/5.0 மார்க் போட்டுள்ளார். இவருடைய இந்த விமர்சனம் தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/UmairSandu/status/1744768821204861437