அமெரிக்க இராணுவத்துக்கு அதிர்ச்சி கொடுத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான 7 டிரோன்களைசுட்டு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கடந்த 6 வாரங்களில் அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான 7 டிரோன்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
இதனால் அமெரிக்காவுக்கு ஆயிரத்து 700 கோடி ரூபாய்வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 40 நாட்களாக, ஏறத்தாழ தினமும் ஏமன் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்திவருகிறது.
அதனை கண்டித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் ஏமனில் நடத்தப்பட்ட பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
(Visited 2 times, 2 visits today)