ஹுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் : ஒரு மாதத்திற்கு பிறகு ஆஸ்திரேலியா நோக்கி நகரும் கால்நடை கப்பல்!
ஏறக்குறைய ஒரு மாதமாக கடலில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான கால்நடைகளை ஏற்றிச் செல்லும் கப்பல் இறுதியாக ஆஸ்திரேலியாவில் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு விலங்குகளின் நலன் கருத்தி குறித்த கால்நடைகள் இறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. MV Bahijah கப்பலில் ஜன. 5 முதல் சுமார் 16,500 செம்மறி ஆடுகளும் மாடுகளும் அடைத்துவைக்கப்பட்டுள்ளன.
மேற்கு ஆஸ்திரேலிய துறைமுகமான ஃப்ரீமண்டலில் இருந்து மத்திய கிழக்கிற்குப் பயணித்தபோது, ஹுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கடந்த திங்கட்கிழமை முதல் கப்பல் மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கப்பலில் உள்ள விலங்குகளின் நலன் குறித்த கவலைகள் அதிகரித்தன.
இறுதியாக வியாழன் அன்று, அதே துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு 25 நாட்களுக்குப் பிறகு, அது ஃப்ரீமண்டலில் வந்து சேர்ந்தது.
பிராந்தியத்தில் வெப்ப அலை நிலைமைகளைக் கொண்ட சில கால்நடைகளை பாதுகாப்பாக இறக்கி தனிமைப்படுத்துவது குறித்த திட்டங்களை உருவாக்க அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.