வெப் தொடரில் தனி இடம் பிடித்த “ஹார்ட் பீட்” -க்கு கிடைத்த விருது

இன்றைய காலக்கட்டத்தில் சினிமா சின்னத்திரை சீரியல்களைத்தாண்டி வெப் சீரிஸ் என்ற புது அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.
ஓடிடி தளங்களில் மட்டுமே பார்க்கக்கூடிய இந்த தொடர்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றார்கள்.
இவற்றில், சோனி லைவ் ஓடிடி, ஆஹா தமிழ் ஓடிடி, டெண்ட்கொட்டா ஓடிடி, நெக்ஸ்ட் ஓடிடி, ஜீ5 ஓடிடி, அமேசான் பிரைம் ஓடிடி, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி என தளங்கள் இருக்கின்றன.
இதில் டெலி பேக்டரி தயாரித்துள்ள இந்த தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் தற்போது சீசன் 2 ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
‘ஹார்ட் பீட்’ சீசன் 2-வை தீபக் சுந்த சுந்தரராஜன் எழுதி இயக்கி உள்ளார். ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2024 இல் வெப்சீரிஸ் இலக்கணங்களுக்குள் அடங்காமல் சின்னத்திரைக்குப் புது ரத்தம் பாய்ச்சி புத்துணர்வாய் துடிக்க வைத்திருக்கிறது ‘ஹார்ட் பீட்’.
யாரும் அதிகம் எட்டிப்பார்க்காத மெடிக்கல் டிராமா என்ற புதுக்களத்தில் நெகிழ்ச்சியான பாசப் பிணைப்புகளையும் உன்னத தருணங்களையும் உணர்வோடு கலந்து கொடுத்ததில் தீபக் சுந்தர்ராஜன், அப்துல் ஹபீஸ் இருவருக்கும் ஆனந்த விகடன் நூற்றுக்கு நூறு கொடுக்கின்றது.
ரீனா, ரதி, விஜய், அர்ஜுன், ராக்கி, தேஜு என எல்லாப் பாத்திரங்களுக்கும் தனித்தனி ரசிகர் கூட்டங்கள் உருவாகி உள்ளது.
170 வாரங்களைக் கடந்து இன்றும் வெற்றிகரமாக ஒவ்வொரு எபிசோட்டுகளும் செல்கின்றன.
காதல், போராட்டம், தடுமாற்றம் என ஒவ்வொரு எபிசோடும் வெளிப்படுத்துவது எதார்த்த வாழ்வின் அசலான சித்திரங்கள்.
நகைச்சுவை, நெகிழ்ச்சி, மனிதநேயமென சரிவரக் கலந்து புத்தம்புது இளைஞர்களின் இதயத்துடிப்பாக மாறியிருக்கும் இந்த Heart Beat தொடருக்கு Most Celebrated Series விருது வழங்கிக் கொண்டாடுகிறது ஆனந்த விகடன்.