Tamil News

வவுனியாவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு கௌரவிப்பு

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 2022ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 131 மாணவர்களினை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பிரதம விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியம் முழங்க மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 131 மாணவர்களிற்கு வெற்றிப்பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அத்தோடு மூன்று இனங்களையும் சேர்ந்த மாணவர்களினால் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண கல்விப்பணிப்பாளர் ஜே. ஜோன்குயின்ரஸ் கலந்து கொண்டதோடு வவுனியா மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் ஜே. எம். நிலக்சன், இ. மி. சபையின் தம்ப பவானி காற்றாலை மின் உற்பத்தி மற்றும் மின் உற்பத்தி நிலைய பிரதம பொறியிலாளர் திருமதி மைதிலி தயாபரன், உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களுக்கு நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version